Thursday, February 11, 2010

சின்ன சின்ன செய்திகள் (பல் சுவை

நெருப்புக் கோழியின்
கண்கள் அதன் மூளையின்
அளவை விடப் பெரியதாக
இருக்கும்.

ரேஷ்மீ சிக்கன்

தேவையானப் பொருட்கள்
சிக்கன் - 1/2கிலோ
நறுக்கிய வெங்காயம்- 2
அரைத்த வெங்காயம்- 1
தக்காளிப்யூரி - 5ஸ்பூன்
பாலாடை - 1/2கப்
இஞ்சி பூண்டு விழுது- 2ஸ்பூன்
ப.மிளகாய்- 6
மிளகுத்தூள்- 1ஸ்பூன்
மிளகய்த்தூள்- 1/2ஸ்பூன்
சோயாசாஸ்- 1/2ஸ்பூன்
கரம்மசாலா- 1ஸ்பூன்
கொ.மல்லி- கொஞ்சம்
அரைத்த முந்திரி விழுது - 1/4கப்
உப்பு, எண்ணெய்- தேவைக்கு
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கி தனியாக எடுத்து
வைக்கவும்.
அதே எண்ணெயில் அரைத்த வெங்காயம் , ப.மிளகாய் போட்டு வதக்கவும்.
இஞ்சிபூண்டுவிழுது, தக்காளி ப்யூரி, பாலாடை போட்டு வதக்கவும்.
சிக்கனை போட்டு வதக்கிய பின்பு மிளகுத்தூள், மிளாகாய்த்தூள், முந்திரிவிழுது சேர்த்து 10நிமிடம் பிரட்டவும்.
பிறகு உப்பு சோயாசாஸ் ஊற்றி 10நிமிடம் குறைவான தணலில் வைத்து இறக்கவும்
பரிமாறும் முன்பு வறுத்து வைத்த வெங்காயத்தை மேலே போட்டு எலுமிச்சைசாறு ஊற்றி பரிமாறவும்.

தெரிஞ்சுக்கங்க!!!!!!-4

niftyகடற்கரையோ ரயில் வசதியோ சாலை வசதியோ இல்லாத நாடு லாவோஸ். சுமார் 2 லட்சத்து 37 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள அந்நாட்டின் ஒரே போக்குவரத்து படகு போக்குவரத்து மட்டுமே.
சீனாவில் சைதுங் என்ற பாலம் உள்ளது. இதன் நீளம் சுமார் முக்கால் கிலோ மீட்டராகும். இப்பாலம் முழுக்க முழுக்க பீங்கானால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
அலங்காரச் செடி என்ற நிலையிலேயே உருளைக் கிழங்கு தென் அமெரிக்காவில் இருந்து 1539ம் ஆண்டு ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்யப் பட்டது.
மனிதனின் நாவில் சுமார் 8000 சுவை மொட்டுகள் உள்ளன.
நம் உடலில் 72000 நரம்புகள் உள்ளன.
நத்தைக்கு மிகச் சிறிய 12000 பற்கள் உள்ளன.
கோல்டன் பிளேவர் என்ற பறவை 2500 மைல் பறக்கும் சக்தியுடையது.
திருக்குறள் 1812ம் ஆண்டு ஓலை சுவடியில் அச்சிடப்பட்டது.
மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.
நீலத் திமிங்கலத்தின் குட்டி ஒரு நாளைக்கு 100 லிட்டர் பால் குடிக்கும்.
ஆஸ்கர் விருதின் முந்தைய பெயர் அகாடமி விருது.
உலகிலேயே தந்தை நாடு என அழைக்கப்படும் நாடு ஜெர்மனி.
விண்வெளியில் அதிக நாள் பயணம் செய்தவர் வாலரி பாலியா கோவ்.
உலக சுகாதார நிறுவனம் ஜெனிவாவில் உள்ளது.
உலகின் மிகப் பெரிய பறவை மற்றும் இமை உள்ள பறவை நெருப்புக் கோழி.

காய்கறி சமைக்கும் போது கவனிக்க வேண்டியவை

காய்கறிகளில் தோல் சீவும் போது லேசாக நீக்க வேண்டும் ஏன் எனில் தோலின் உட்பாகத்தில் வைட்டமின்கள் அடங்கி உள்ளன.காய்கறிகளை சரியான பதத்திலும் சரியலவு தண்ணீர் ஊற்றி சமைக்க வேண்டும். அதிகமாக சமைக்கும் போது சத்துக்கள் வீணாகிவிடும்.சமைத்த காய்கறிகளை மீண்டும் மீண்டும் சூடு செய்யகூடாது
.சமையல் சோடா. பட்டை, கிராம்பு, போன்றவற்றை போடகூடாது.பச்சை இலை காய்கறிகளை 1,2 நாட்களில் சமைக்க வேண்டும். இலை பழுத்தால் சத்து குறையும்.காய்கறிகளைமிக சிறிதாக வெட்ட கூடாது காய்கறிகளை அதிக நேரம் ஊற வைத்தோ , அடிக்கடி கழுவுதலோ கூடாது .
பூண்டின் மருத்துவம்

உடல் பருமனையும், ரத்தத்தில் ulla கொழுப்பையும் குறைக்கும்.
இதய அடைப்பை நீக்கும்.
இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.
நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.
மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
தாய்ப்பால் சுரக்கும்.
மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.
பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

பிளாஸ்டிக்கில் கவனம் தேவை


1. ஒரு சின்ன ஆனா முக்கியமான விஷயத்தை தெரிஞ்சிக்குவோமா???
பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். ("Resin identification code" - 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும்.
2. தண்ணீர் கொண்டு செல்ல நாம் வாங்கும் பிலாஸ்டிக் பாட்டில்கள் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை?
நீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade plastics) இருந்தால் நிச்சயம் உங்கள் நீரும், அதை குடிக்கும் உங்கள் ஆரோக்கியமும் பாதுகாப்பாக உள்ளது. காரணம் 1- 4 வரை எண் உள்ள பாட்டில்கள் உணவு எடுத்து செல்லும் தகுதி உடையவை அல்ல. 5 - 7 வரை உள்ளவை மட்டுமே உனவு கொண்டு செல்லும் தரம் உடையவை.
3. எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
உணவு பொருட்கள் கொண்டு செல்லும் பிலாஸ்டிக்குகள் (தண்ணீர், உணவு, பழம், காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சரி) எப்போதும் 5 - 7 வரை எண் கொண்ட பிளாஸ்டிக்கா என பார்த்து வாங்குங்கள்(Food Grade Plastic).
4. உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
1 - 4 எண் கொண்டவை உணவு கொண்டு செல்ல தகுதியானவை அல்ல. அவை வெப்ப சூழல் மாறும் போது கார்சினோஜென் (Carcinogens) எனப்படும் ஒன்றை வெளியிடுவதால் அதில் உள்ள உணவை உண்பவருக்கு புற்றுநோய் (Cancer) ஏற்பட காரணமாகிறது.

Sunday, January 24, 2010

TARIKH PEPERIKSAAN AWAM TAHUN 2010

Peperiksaan Tarikh
UPSR 21, 22, 23 September 2010
PMR 5, 6, 7, 11, 12 Oktober 2010
SPM 22 November 2010 – 16 Disember 2010
SPM(U) 22 & 23 Jun 2010
STAM (LISAN) 12 hingga 23 Julai 2010
STAM (Bertulis) 18, 19, 20, 26, 27 Oktober 2010
Tarikh tersebut mengambil kira keperluan cuti bagi perayaan-perayaan
utama sepanjang tempoh peperiksaan seperti berikut:
Perayaan Tarikh
10 & 11 September 2010 Hari Raya Puasa
16 September 2010 Hari Malaysia
5 November 2010 Deepavali
17 & 18 November 2010 Hari Raya Haji
(18 Nov: Kedah, Kelantan, Perlis dan
Terengganu)
7 Disember 2010 Awal Muharam